எலுமிச்சை:- இதில் சிட்ரிக் அசிட் நிறைந்துள்ளது, இந்த எலுமிச்சை சாற்றில் சிறிது நீர் கலந்து அதை கருமை உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்
ஓரேஞ்ச்:- இதிலும் எலும்பிச்சையில் உள்ளது போன்று சிட்ரிக் அசிட் உள்ளது.எனவே ஓரேஞ்ச் பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து தண்ணீர் அல்லது ரோஸ் வோட்டர் கலந்து பேஸ்ட் செய்து கருமையான இடத்தில் பூசி உலர வைத்து பின் நீரினால் கழுவ வேண்டும்.
தயிர்:- இதில் லாட்டிக்அசிட் நிறைந்துள்ளது,எனவே ஒரு டிஸ்ஸில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச்சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து கருமையான இடத்தில் தடவி உலர வைத்து பின்பு நீரினால் கழுவவேண்டும்.
பால்:- இதிலும் லாட்டிக்அசிட் நிறைந்துள்ளது, எனவே கருமையான இடத்தில் பால் அல்லது பாலாடையை பூசி உலர வைத்து பின் நீரினால் கழுவ வேண்டும்.
தேன்:- தேனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கருமை உள்ள இடத்தில் தடவி உலர வைத்து பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
கற்றாழை:- இதன் தண்டை வெட்டி எடுத்து அதன் உள்ளே இருக்கும் வழு வழுப்பான பகுதியை எடுத்து கருமையான இடத்தில் தடவி உலரவைத்து பின்பு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.